Login with Facebook

Posted by tamil on Thursday, August 21, 2014

நஸ்ரியா, பகத் பாசில் திருமணம்:

---------------------------------------------------

தமிழில் ‘நேரம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நஸ்ரியா.

தொடர்ந்து நய்யாண்டி, ராஜாராணி, வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்காஹ் படங்களில் நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார். மலையாளத்தில் எல் பார் லவ் என்ற படத்தில் நடித்த போது பகத் பாசில்-நஸ்ரியா இருவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்டினர். இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு நஸ்ரியாவுக்கும் மலையாள நடிகர் பகத் பாசிலுக்கும் திருமணம் நிச்சயமானது. இந்நிலையில் இவர்களின் திருமணம், திருவனந்தபுரத்தில், அல்சாஜ் ஆடிட்டோரியத்தில், இஸ்லாமிய முறைப்படி நேற்று நடந்தது. திருமண நிகழ்ச்சியில் மலையாள திரையுலகத்தினர், அரசியல் தலைவர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே திருமண மண்டபத்தில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் திருமண மண்டபம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுகிழமை) ஆலப்புழாவில் நடக்கிறது. பகத் பாசில் பிரபல மலையாள இயக்குனர் பாசிலின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

{ 0 comments... read them below or add one }

Post a Comment