Login with Facebook

சிக்கலில் கோஹ்லி, தற்போது இந்திய வீரர்கள் ?

Posted by tamil on Friday, August 22, 2014

 சிக்கலில் கோஹ்லி, தற்போது இந்திய வீரர்கள் ?

இந்திய இளம் வீரர் விராட் கோஹ்லியுடன் அனுஷ்கா தங்கிக் கொள்ள சிறப்பு அனுமதி கொடுத்தது தொடர்பாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பிய விராத் கோஹ்லி, 5 டெஸ்டில், 134 ஓட்டங்கள் தான் எடுத்தார். இவரும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் நண்பர்களாக உள்ளனர். அதனால் இருவரும் அடிக்கடி சந்தித்து கொள்வது வழக்கம்.இந்த சந்திப்பு இங்கிலாந்து தொடரிலும் தொடர்கிறது. இந்திய வீரர்களுடன் அவர்களது மனைவிகள் மட்டுமே உடன் செல்ல அனுமதி உள்ளது.
 
ஆனால், துணை அணித்தலைவர் கோஹ்லி, தனது தோழி அனுஷ்காவை தங்க வைத்துக் கொள்ள இந்திய கிரிக்கெட் வாரிய செயலர் சஞ்சய் படேலிடம் அனுமதி கேட்டுள்ளார்.
டெஸ்ட் தொடரின் தொடக்கத்தில் திணறிய இவருக்கு, ஆறுதலாக இருக்கட்டும் என்று நினைத்த சஞ்சய் படேல், இந்திய அணி நிர்வாகத்தை தொடர்பு கொண்டார். கோஹ்லி கோரிக்கையில் தவறு இல்லை, இதை ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், இந்திய அணியின் தோல்வி தொடர்பாக இயக்குனர் சுனில் தேவ் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார்.இதில், விராட் கோஹ்லி– அனுஷ்கா விவகாரத்தையும் சேர்க்க வேண்டும். கோஹ்லிக்கு சலுகை எதுவும் காட்டக் கூடாது என்று கூறியுள்ளார்.

தற்போது வீரர்களின் மனைவி மற்றும் காதலிகளால் தான் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை என்ற குற்றசாட்டும் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து வீரர்களின் மனைவி அவர்களுடன் எத்தனை நாட்கள் இருக்கலாம் என்பது குறித்து வரையறை செய்யப்படும் என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

{ 0 comments... read them below or add one }

Post a Comment